இப்பவும் அவளை திருமணம் செய்துக்கொள்வேன்..! 83 வயதில் காதலா..?
மண்வாசனை., கிராமத்து காதல் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது இயக்குனர் “பாரதி ராஜா”.. மண்மனம் மாறாத எளிமையான காதாபாத்திரங்கள் ஒவ்வொரு கிராமத்தின் வீட்டில் நடக்கும் விஷயங்களை படமாக காட்டியவர்.. தனது 16 வயதில் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவரின் படங்களை பார்க்கும் பொழுதே இது இவர் இயக்கிய படம் என்று நாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இருக்கும்..
இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என சொல்லலாம்.. உதாரணதிற்கு “முதல் மரியாதை” படத்தில் நடிகை ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் போன்ற நடிகர் நடிகைகளின் முதல் படம் என சொல்லலாம்.. அதே போல் 16 வயதினிலே படத்தில் கூட ஸ்ரீதேவி, ரஜினி காந்த், கவுண்டமணி, பாக்கியராஜ் உட்பட பலரையும் அறிமுக படுத்தி இருப்பார்..
இப்படி பல நடிகர்களை சினிமாவில் கொடிகட்டி பறக்க செய்தவர்.., பாரதிராஜா. தனது படங்களில் மூலம் காதலை அழகாக வெளிப்படுத்தியவர்.., பிரபல பத்திரிக்கைக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் தன்னுடைய முதல் காதல் பற்றி பேசியுள்ளார்..
அதில் அவர் கூறியதாவது ஒருமுறை தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது., தன்னுடைய கார் திடீரென ஒரு பூக்கடையை பார்த்ததும் நின்று விட்டது அதற்கான காரணம் ஏன் என தெரியவில்லை மனம் போன போக்கில் நான் அந்த பூக்கடைக்கு சென்றேன்.. அப்போது மனதுக்குள் ஏதோ நடக்கபோவதை போல ஒரு உள்ளுணர்வு இருந்தது..
அப்போ தான் நான் என் முதல் காதலியை சந்தித்தேன்.., அவள் என்னை பார்த்ததும் வந்து பேசினாள்.. ஒரு பத்திரிகையை நீட்டி எனது பேத்திக்கு கல்யாணம் நீ மறக்காம வரணும் சொல்லி கொடுத்தா.. முதல் காதலை யாரால் தான் மறக்க முடியும்.. அன்று விதியால் நாங்கள் பிரிந்துவிட்டோம் இன்று அவள் மீண்டும் என் வாழ்க்கையில் வந்தால் நான் உடனே திருமணம் செய்துக்கொள்ள தயாராக இருக்கிறேன் என பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..