கோயம்புத்தூரில் உள்ள அவிநாசி ரோடு விரியம்பாளையம் சாலையில் பிரைடல் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது அதில் பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணா பங்கேற்றிருந்தார் அப்போது செய்தியாளர் சந்தித்த அவர் தனது அடுத்த படம் குறித்தும் அரசியல் வாழ்கை குறித்தும் பேசியுள்ளார்.
இன்று கோவை மாவட்டத்தில் பிரைடல் ஸ்டுடியோவின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரோபோ ஷங்கர், அப்புகுட்டி போன்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த விழாவில் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் பங்கேற்றார். விழாவின் இறுதியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை அடுத்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், தற்போது கதைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்தான தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவரிடம் அரசியலுக்கு வருகை தரும் ஆர்வம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதை மக்களும் மகேசனும் தான் முடிவு செய்ய வேண்டும் மக்கள் என்னை அரசியலுக்கு அழைத்தாள் கண்டிப்பாக வருவேன் என்றும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதய ஆட்சி சிறப்பாக செயற்பட்டு கொண்டிருபதாகவும் தெரிவித்தார்.