“உங்களின் குரலாக நான் ஒலிப்பேன்..” பிரியங்கா காந்தி பதவியேற்பு..!!
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரளா மாநிலத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்..
இதனால் வயநாட்டில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானதை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது., இந்த இடைதேர்த்லானது நவம்பர் 13ம் தேதி அறிவிகபட்டதையடுத்து., காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும் அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பாஜக சார்பில் நவ்யாவும் போட்டியிட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிரியங்கா காந்தி கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்று கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது நன்றி உரையாற்றிய பிரியங்கா காந்தி, எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே, உங்களின் குரலாக நான் ஒலிப்பேன் எனது இந்த வெற்றியை உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். நீங்கள் எனக்கு அளித்த அன்பிற்கும், மரியாதைக்கும் நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முதலில் எழுப்பும் குரல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.