”பெண்களின் ஆளுமைகளுக்கான குரல்…” துபாயில் ஐஸ்வர்யா ராய் பேச்சு…!!
உலகம் முழுவதும் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே.., 1994ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.. அதன் பின்னர் அவர் “உலக அழகி” என அழைக்கப்பட்டார்..
1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.. அதன் பின்னர் ஹிந்தியிலும் “பியார் ஹோ கயா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.. அதனை தொடர்ந்து., தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்..
சினிமாத்துறையில் தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் துபாயில் நடைபெற்ற பெண்கள் ஸ்தாபனம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மாற்றத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பேசிய அவர்,
பெண்களாகிய நாம் என்ன சாதித்தோம் என்பதை மிளிரவைக்கும் ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி இருப்பதாகவும் பெண்களின் ஆளுமைகளுக்காக குரல் கொடுத்து ஒரு மாற்றத்தை உருவாக்குவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துபாய் அமீரக துணை அதிபரும், ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் மந்திரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சினிமா பெண் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..