நண்பனை பார்க்க வேண்டும்… இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்…!
மதுரை செல்லத்தம்மன் கோவில் புதுத்த்ருவை சேர்ந்த சூப்பிரமணியன் என்பவர் தனது காரில் வேலைக்கு சென்ற அவர் இரவு பணி முடிந்து வந்து தனது வீட்டில் காரை நிறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கரமாக சத்தம் கேட்பதை உணர்ந்த அவர் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது அவரது கார் முழுவதும் உடைக்கப்பட்டு தீ பிடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கீஜமாசி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.
அதாவது தனது நண்பன் தினேஷ் என்பவர் தற்போது சிறையில் இருப்பதாகவும் அவரை பார்க்க வேண்டும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிவக்குமாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரை பார்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி கார்த்திக்