”திருமணம் செய்ததை நினைத்து வருந்துகிறேன்”…! நடிகை ரேவதி பேட்டி…!
80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவால் அறிமுகபடுத்தப்பட்ட ரேவதி மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இயக்குநரான ரேவதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
மொனராகம், தேவர்மகன், வைதேகி காத்திருந்தாள் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ள ரேவதி ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.
அதன்பின் இவர் 1988ல் சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இவர்கள் 2002ல் இருவரும் பிரி்ந்தனர்.
தற்போது இவர் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது :
“சினிமாவில் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சானா.. இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை நினைத்து மட்டும் இப்பவும் வருத்தப்படுவேன்.
அது என் கல்யாணம், நான் ஒரு 4 வருஷம் கழிச்சு திருமணம் செய்திருக்கணும், 17 வயசுல நடிக்க வந்து 20 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அந்த டைம்ல தான் புன்னகை மன்னன், மெளன ராகம் படங்கள் நடித்திருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் நடிக்காமல் இருந்துட்டு பின்னர் கிழக்கு வாசல், தேவர் மகன் போன்ற நல்ல படங்களில் நடித்ததால் மக்கள் ஏற்றுக்கொண்டாலும், நல்ல நல்ல படங்கள் நிறைய பண்ணுனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிருக்கலாம்னு இப்ப கூட தோணும்” என ரேவதி கூறி இருக்கிறார்.
-பவானி கார்த்திக்