உன் பதில் வேண்டி – எழுத்து கிறுக்கச்சி- கவிதை -18
தென்றல் காற்றை போல
என் வாழ்வில் வந்தவளே..
எனக்கென்று காதல் தேவதையானாளே..
வழிநெடுக்கும் அவளின் பெயரை
உச்சரிக்கும் என் மனது..
உன்னிடம் சொல்ல முடியாமல்
திகைப்பது ஏனோ..
கவிஞன் என பெயர் கொண்ட எனக்கு
உனது பெயரை தவிர வேறு கவிதைகள்
எழுத தோன்றவில்லை..
எனது காதல் தெரியவில்லையா..? என
உனது கண்களிடம் கேட்காதே..
இதயத்திடம் கேள்..
என்னை நினைத்து துடிக்க சொல்வது
உனது இதயம் மட்டுமே…
– லோகேஸ்வரி.வெ