காதலுக்கு எதிர்ப்பு வரம்னு தெரியும்.., அதுக்குன்னு இப்படியெல்லாமா நடக்கும்..?
எங்கள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் எங்கள் உறவினர்கள் எங்களை வெட்டிக்கொள்வோம் என எச்சரித்துள்ளனர் எனவே எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த இளம் காதல் ஜோடிகளால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மேலமடா விளாகம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரனின் மகள் ஆர்த்தி வயது 21 அதே பகுதியில் மேலே 2 வீதியில் வசித்து வரும் சண்முகம் மகன் ருத்ரமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அன்று வீட்டை விட்டு இருவரும் வெளியேறி புதுக்கோட்டை அருகே உள்ள குமாரமலை முருகன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்து மணமகன் ருத்ரமூர்த்தி வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி ஆர்த்தி வீட்டின் உறவினர்கள் ருத்ரமூர்த்தி வீட்டிற்கு சென்று ருத்ர மூர்த்தியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மிரட்டியும் உடனடியாக உன் மகனை வெளியே அனுப்பு எங்கள் பொண்ணை எங்கள் வீட்டிற்கு அனுப்பிவை இல்லை என்றால் அவர்களை வெட்டி கொலை செய்து விடுவோம் எனவும் ஆர்த்தியின் உறவினர்கள் மிரட்டி உள்ளனர்.
இதனால் அச்சமடைந்த இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்பொழுது தங்களுடைய உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறி புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையத்தில் இன்று இளம் காதல் ஜோடிகள் இருவரும் தஞ்சம் அடைந்தனர் மேலும் உடனடியாக தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்
எங்களுடைய உறவினர்கள் எப்ப வேண்டுமானாலும் எங்களை ஏதாவது செய்து விடுவார்கள் எனவே எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் உயிருக்கு ஆபத்து எனக்கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த இளம் காதல் ஜோடிகளால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post