விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..
பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.
விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மூலம் மானியத்தில் அமைக்கப்படும் வட்டார மற்றும் கிராம அளவிலான வேளாண் எந்திர வாடகை மையங்களில் தேவைப்படுகின்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் சேர்த்து டிரோன் கருவிகளையும் மானியத்தில் பெறலாம்.
டிரோன்களைக் கொண்டு வேளாண் எந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் எந்திர வாடகை மையங்கள், உயர் தொழில்நுட்ப வாடகை மையங்களில் டிரோன்களை வாங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு டிரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
டிரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் உரிமத்தினை பெற்று டிரோனை இயக்கலாம் அல்லது ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம். டிரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் இருந்து 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..