ராட்சத பலூனில் மாடர்ன் திரையரங்கு..! ஒரே ஷோவில் இத்தனை பேர் பார்க்கலாமா..? எந்த இடம் தெரியுமா..?
பழங்கால முதல் இன்று வரை மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருப்பது திரையரங்கத்தில் சினிமா பார்ப்பதுதான். கடந்த காலங்களில் வெறுமனே சிமெண்ட் சீட்டு போட்டு, மணல் பரப்பி சினிமா திரையிடப்படும். அப்பொழுது சினிமா பார்க்க வருகின்றவர்கள், தரையில் அமர்ந்து பார்த்து வந்தனர்.
தற்போது சினிமா தியேட்டர் என்பது, நவீன வசதி உடன் அமரும் வகையிலும், சாய்ந்து படுப்பது போன்ற இருக்கைகள் அமைத்து, குளிர்சாதன வசதியுடன் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் காலங்கள் மாற மாற நவீன வசதிகள், வரும் சூழலில் சினிமா பார்ப்பதற்கான கட்டணங்களும் அதிகரித்து வந்தது. ஆனாலும் சினிமா பார்ப்பவர்களின் நிலை குறையாமல் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக சினிமா திரையரங்கம் , ஒன்று என்பது மாறி, நான்கு, ஐந்து ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்கள், வெவ்வேறு இடங்களில் திரையிடப்படுவது போன்ற நவீன வசதிகளை கொண்டு வந்தது. ஆனால் இந்த நவீன வசதிகள் முழுவதும் பெருநகரங்களில் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் இருப்பவர்கள், சினிமா திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும் என்றால், அந்தப் பகுதியில் உள்ள சாதாரண திரையரங்குக்கு மட்டுமே சென்று, திரைப்படம் பார்த்து வந்தனர்..
தருமபுரி மாவட்டம் பொம்மிடியை சார்ந்த அக்குபஞ்சர் டாக்டர் ரமேஷ் என்பவர், ஆரம்ப காலங்களில் இருந்து சினிமா மீது இருந்த மோகத்தால், சினிமாத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெளி ஊர்களுக்கு செல்லுகின்ற பொழுது, நவீன வசதி கொண்ட புதியதாக வித்தியாசமான முறையில், மாடர்ன் தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்று மும்பை சென்றபோது ராட்சத பலூனுக்குள் சினிமா திரையரங்கம் இருப்பதை பார்த்து, இதுபோன்று நமது ஊரிலும் அமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
தற்போது பொம்மிடி பேருந்து நிலையம் அருகில் 50 சென்ட் நிலத்தில், 20 ஆயிரம் சதுர அடியில் ராட்சத பலூன் மூலம் நவீன வசதி கொண்ட குளிர்சாதன திரையரங்கை அமைத்துள்ளார். இது முழுவதும் கட்டிடங்கள் இல்லாமல், முழுவதும் பலூனால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாக பலூன் என்பது தெரியாத அளவிற்கு அழகான இருக்கைகள், குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திரையரங்கில் படம் பார்க்கின்ற பொழுது அதனுடைய சவுண்ட் உள்ளிட்ட வசதிகள், பெரிய பெரிய திரையரங்குகளில் இருப்பது போன்றவை டிஜிட்டல் சவுண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு வசதி கொண்ட இந்த திரையரங்கில் செய்யப்படுகின்ற, சாதாரண அளவில் கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 140 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பலூனால் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கு என்பதால், பஞ்சர் ஆகிவிடும், காற்று வீசினால் பாதிப்புகள் ஏற்படும், இது போன்ற எந்த வித பாதிப்புகளும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த திரையரங்கில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், 3 மணி நேரத்தில் இந்த பலூனை கழட்டி, வேற இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
ஒரே வாரத்தில் திரையரங்கை தயார் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரையரங்கில் கண்டைனர்கள் மூலமாக டிக்கெட் கவுண்டர், கேண்டின்கள், ப்ராஜெக்ட் ரூம் போன்றவற்றை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தியுள்ளனர்.
சாதாரணமாக ஒரு குளிர்சாதன வசதியுடன் கூடிய திரையரங்க அமைத்தால் 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்த திரையரங்கத்தில் அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகிறது. இந்த பலூன் திரையரங்கை அறிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இது அமைப்பது முறை குறித்து நேரில் வந்து பார்த்து கேட்டு அறிந்து செல்கின்றனர்.
இது முதன் முறையாக பொம்மிடியில் அமைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு போச்சம்பள்ளி நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைப்பதற்கான திட்டமிட்டுள்ளனர். மேலும் பலூனில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..