கதை முடிந்தது..!! ஓபிஎஸ் கவலை..!
தமிழ்நாட்டின் அரசியல் அவமானம், அடிமை ஓபிஎஸ், தன்னை ஒரு தலைவராகக் கருதிக் கொண்டு, அண்ணா திமுக வை பாஜக விடம் அடகு வைக்க முயன்றார்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று, பாஜக தலைமையிலான அணியில் 15 இடங்களில் போட்டியிட விழைகின்றோம் என வெளிப்படையாகவே கூறினார்.
இதேபோலத்தான் எடப்பாடியை, பாஜக மேலிடம் மிரட்டியது. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் 25 தொகுதி சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கு 150 தொகுதி என்று கூறினாராம். அதனால், எடப்பாடி பாஜகவை விரட்டி விட்டார்.
அண்ணா திமுக வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் 10 க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடுத்தார். அத்தனையிலும் படுதோல்வி. வேறு வழி இன்றி, தேனியை விட்டுவிட்டு, இராமநாதரபுரத்தில் போய் நிற்கின்றார்.
கடைசி முயற்சியாக, எனக்கு மட்டும் இரட்டை இலை தர வேண்டும் என வழக்கு போட்டார்.
உங்களுக்கு ஆக்சிஜன் தர முடியாது; இடைக்கால ஆணை எதுவும் பிறப்பிக்க முடியாது; சின்னம் வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திடம் போய்க் கேளுங்கள் என, நேற்று உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.
அதாவது ஆக்சிஜன் தர முடியாது என்றே கூறி இருக்கின்றனர். ஓபிஎஸ் கதை, ஏற்கனவே முடிந்து போனது என்பதைத்தான் அப்படிக் குறிப்புக் காட்டி இருக்கின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.