“டார்ச்சர் தாங்க முடியல” – .கணவரின் உதவியால் கள்ளக்காதலனை கொன்ற பெண்!
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிக்கும் தம்பதியினர் புஷ்பா-வினோத். இருவரும் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அப்போது புஷ்பாவிற்கும் அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஷிவ்நாத் என்ற இளைஞர்க்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஒரு கட்டத்தில் மேல் புஷ்பாவுக்கு ஷிவ்நாத் மீது காதல் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக ஷிவ்நாத்திடம் பேசுவடை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஷிவ்நாத் தன்னிடம் பேசும் படி புஷ்பாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் புஷ்பா நடந்தவற்றை கணவர் வினோத்திடம் கூறியதோடு ஷ்வ்நாத் தொந்தரவு செய்வதும் குறித்து கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் தனது மனைவியுடன் சேர்ந்து ஷ்வ்நாதை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு, புஷ்பா தனது நிறுவனத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு சுவன்சாவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். அங்குள்ள தோழியின் வீட்டிற்கு காதலன் ஷிவ் நாத்தையும் அழைத்துள்ளார்.
நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ஷிவ்நாத் ஆசையுடன் காதலியை சந்திக்க சென்றார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த வினோத் ஷ்வ்நாத்தை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் பயங்கர ஆயுதத்தை கொண்டு உடலை மூன்று துண்டுகளாக வெட்டி தோழியின் வீட்டில் புதைத்துள்ளனர்.
வெளியே சென்ற ஷ்வ்நாத் வீடு திரும்பத்தால் அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள் பீகார் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
ஷிவ்நாத்தின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை தொடங்கியபோது, கடைசியாக புஷ்பாவிடம் பேசியது தெரிய வந்தது.
பின்னர் புஷ்பாவை பிடித்து விசாரித்த போது கொலை தொடர்பான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் ஷிவ்நாத் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புஷ்பா மற்றும் அவரது கணவர் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்ட,நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த புஷ்பாவின் தோழியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”