“தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன்.. உங்கள் வாழ்த்துக்களுடன் பறக்கிறேன்..” முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவபதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்காவில் 17 நாட்கள் தங்க இருப்பதாகவும் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீட்டாளர்களை கொண்டு வருவது இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிதுள்ளார்..
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்., கட்சி தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது..
“நம் உயிரில் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவரின் அன்பில் கலந்த என் உடன்பிறப்புகளாகிய, உங்களின் ஒருவன் எழுதும் அன்பு பயண கடிதம்
“பறவையை போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனமும் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதங்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானம் பயணம். கடல் கடந்து பயணிக்கும் பறவைகள் போல, மனிதகுலம் பல நாடுகளுக்கும் பறக்கத் தொடங்கி விட்டது. தனிப்பட்ட மனிதனின் மகிழ்ச்சிக்கான பயணங்கள் உண்டு. வேலை தேடி பல நாடுகளுக்கும் பறப்பவர்கள் உண்டு. அலுவல் சார்ந்த சந்திப்புகளுக்கான பயணங்கள் உண்டு.
அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றான ஒரு சிறந்த பயணத்தை நான் இப்போது பயணிக்கவுள்ளேன்..
இதற்கு முன் இருந்த ஆட்சிக்காலங்களில் எல்லாம் தேங்கிக் கிடந்த தொழில் வளர்ச்சியை மீட்டெடுத்து, பல முதலீடுகளை உள்ளிழுத்து அந்த தொழிற்கட்ட வளர்ச்சிகள் மூலமாக தரமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்..
தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் “ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது. அந்த முனைப்பின் ஒரு தொடக்கமாக இன்று ஆகஸ்ட் 27ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனாக நான் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது..
“கடல் கடந்து சென்றாலும் என் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்.. இருக்கும். விமர்சனம் விவாதம் செய்வோருக்கு அதை நாம் நிறைவேற்றும் பயனுள்ள திட்டங்களே பதிலாக அமையட்டும். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன்.. உங்கள் வாழ்த்துக்களுடன் பறக்கிறேன்” என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

















