பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை..! இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை..!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கள்ளசாராயத்தை அருந்தியவர்கள் கடந்த 18ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 115 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கோவிந்தராஜ், கண்ணுக்குட்டி, விஜய், தாமோதரன் ஆகியோரை கைது செய்து 328, 304 (2), 41 I, 41 A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மற்றும் கள்ள சாராயம் குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை :
* பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்வி செலவினை தமிழக அரசே ஏற்கும்.
* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை அவர்களின் பராமரிப்பு செலவிற்காக மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.
* பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக வழங்கப்படும்
பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலைவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். என ம்,முதலைச்சர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை. பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு சொல்ல முடியும். ஆனால் இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
– லோகேஸ்வரி.வெ