சென்னை மயிலாப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் வாலிபர் கழுத்தறுத்து கொலை… பலமுறை கண்டித்தும் கேட்காமல் உறவில் இருந்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் கணவர் வெறிச் செயல்
மயிலாப்பூர் நொச்சி நகர், புதிய ஹவுசிங் போர்டு 6வது பிளாக்கில் வசிப்பவர் பிரசன்னா(38) இவருக்கு திருமணம் ஆகி மனைவி கிரேசி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன இவருக்கும் டுமிங்குப்பம் செல்வராஜபுரம் பகுதியை சார்ந்த டொமினிக் என்பவர் மனைவி சசிகலா(35) என்பவருடன் 3 வருட கள்ளக்காதலில் இருந்துள்ளனர்
சசிகலாவின் கணவர் டொமினிக் இவர்களின் கள்ளகாதலை பலமுறை கண்டித்துள்ளார் மேலும் பலமுறை பிரசன்னாவின் வீட்டிற்கு சென்று பிரச்சினையும் செய்துள்ளார் பிரசன்னாவின் மனைவியும் பலமுறை கண்டித்துள்ளார் இதனை இருவருமே சிறிதும் பொருட்படுத்தவில்லை
இது போன்ற பிரச்சினைகள் தொடந்து நடப்பதால் பிரசன்னாவிற்கும் அவரது மனைவிக்குமே குடும்பத்தில் நிறைய சண்டை வந்துள்ளது இருவரும் ஒரே குடும்பத்தில் பிரிந்தே வாழ்ந்துள்ளனர்.சம்பவம் நடந்த நேற்று காலை கூட சசிகலாவின் கணவர் டொமினிக் பிரசன்னாவின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார்.
இதனால் பிரசன்னாவின் மனைவி கிரேசி மயிலாபபூர் காவல் நிலையத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் வீட்டில் நிறைய குடும்ப பிரச்சினை வருவதாகவும் இதனை சரிசெய்து தரவேண்டும் மற்றும் தனது கணவரை கண்டித்து தன்னோடு நல்லபடியாக வாழ வழி செய்ய வேண்டும் என புகார் அளித்துவிட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கணவர் பிரசன்னா கழுத்தறுத்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்
அதனை கண்டு பிரசன்னா மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் தானாக கழுத்து அறுத்து கொண்டு இறந்து கிடப்பதாக முதலில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரசன்னாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர்
பிரசன்னாவின் இளைய மகள் அவரது தாயிடம் அப்பா தானாக இறக்கவில்லை சசிகலாவின் கணவர் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து “உங்க அப்பா எங்கே என்று கேட்டார் உள்ளே தூங்கிக் கொண்டு இருக்கிறார் எனக கூறினேன் அவர் உள்ளே சென்று அப்பாவோடு சண்டை போட்டார்” என கூறியுள்ளார்.டொமினிக் தன்னுடன் இரண்டு நபர்களை அழைத்து வந்து பிரசன்னாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் டொமினிக் பெற்றோரிடம் விசாரித்த போது தான் இப்படி ஒரு கொலை செய்துவிட்டேன் எனவும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது அடுத்தடுத்த போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலையாளி டோமினிக் கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கூடி இருக்கும் மாலை நேரத்தில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது நொச்சி குப்பம் நகர் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.