சிம்ஸ் மருத்துவமனை குழு மூலம் இலவச முழு உடல் பரிசோதனை முகாம்..
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிம்ஸ் மருத்துவமனை குழு மூலம் இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மேல்நிலைப் பள்ளியில் தென் சென்னை மேற்கு மாவட்டம் மற்றும் சைதாபேட்டை சாலை வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற முகாமை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
முகாமில் தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஆர் பன்னீர்செல்வம், செயலாளார் பாலன் மற்றும் வடபழனி சைதாப்பேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்க சங்க தலைவர் சுடலைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.