திருப்பூரில் தொடரும் ஆள் கடத்தல்..!! போலீஸ் அதிரடி..!!
திருப்பூரில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் வசந்த அளித்த புகாரில், தன் மீது 2021 ஆம் ஆண்டு திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு அதனை கைவிட்டு, தற்போது பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் மது போதையில் அமர்ந்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த கும்பலில் இருந்து ஒருவர் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து கணக்கம்பாளையம் கூட்டிச் சென்று நீ பாலியல் தொழில் செய்து கொண்டு இருக்கிறாய் , அதனால் எங்களுக்கு பணம் கொடு என கேட்டனர்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்த நிலையில் தன்னை கையால் அடித்தனர்.. தொடர்ந்து தகாத வார்த்தையால் பேசி காயப்படுத்தினர். தொடர்ந்து என்னிடம் பணம் இல்லை என கூற என்னை கீழே தள்ளிவிட்டு காலால் உதைத்து காயப்படுத்தினர். பின்னர் மீண்டும் காரில் ஏற்றி வீட்டிற்கு அருகில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்த் அளித்த புகாரின் பேரில் திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வசந்தை காரில் கடத்திச் சென்ற நபர்கள் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (36), பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்கிற மணி (41) , திருப்பூர் கருப்பராயன் நகர் பகுதியைச் சேர்ந்த முரளி (28) மற்றும் பாரத் (26) என்பது தெரிய வந்தது. இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் மாத மற்றும் வார இதழ்களில் பத்திரிக்கையாளர்களாக இருப்பதாக அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..