60 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொலை செய்து நாடகமாடிய இளைஞர் போலீசில் சிக்கியது எப்படி..?
மதுரை திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே தூங்கி கொண்டிருந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு.., அவரை கொலை செய்து இருக்கிறார். கொலை செய்து விட்டு திருநகர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இங்கு பாட்டி ஒருவர் மயங்கி நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார் என கூறியுள்ளார்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் அந்த பாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.., அப்பொழுது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின் மீண்டும் பேருந்து நிலையம் வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.., அதில் போன் செய்த இளைஞர் தான் அந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது..,
கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்ற இளைஞரை காவல் துறையினர் காலை போன் செய்த நம்பரை வைத்து ட்ராக் செய்து கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்து விட்டு.., கொலை செய்த குற்றத்திற்காகவும் ஒன்றுமே தெரியாது போல் நடித்த குற்றத்திற்காகவும் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
Discussion about this post