கர்பிணிகள் வீட்டு வேலை செய்யலாமா..? குழந்தைக்கு நல்லதா..?
கர்பமாக இருக்கும் காலம் பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு காலம். கர்பமாக இருக்கும் பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.
கர்ப்பமாக இருக்கும் சமையத்தில் உடலை சுறுசுருப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையை நாம் கூடுதலாக கவனித்துக் கொள்வது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் இருக்கச்செய்கிறது. கர்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதினால் கால்களில் வீக்கம் மற்றும் முதுகுவலி ஏற்ப்படுகிறது இதனால் கர்பிணிகள் நீண்ட நேரம் நின்று வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இடையில் சிறிது இடைவெளி எடுத்து வேலையை செய்ய வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் துணி துவைப்பது, வீட்டை துடைப்பது போன்ற வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
கர்பமாக இருக்கும் பெண்கள் ஏணியில் ஏறுவது, மலையில் ஏறுவது போன்றவற்றை செய்யவே கூடாது, இது குழந்தைகளுக்கு ஆபத்தை தரும்.