ஆந்திராவில் நடந்த கோரசம்பவம்..!! விபத்திற்கான காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 3 பயணிகள் பலியான நிலையில் ஏராளாமனவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
திடீரென்று 2 ரயில்களும் மோதிக்கொண்டன. இதில் 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் காயமடைந்து அலறி துடித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினர்.
ஆனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மின்சார கம்பங்கள் சேமதடைந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் அங்கு மீட்பு பணி தாமதமாகி உள்ளது.
இருப்பினும் ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை 3 பயணிகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..