கேரளாவில் கனமழை..!! 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புது காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது..
இந்நிலையில்., இன்னும் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை :
அதேபோல் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் நவம்பர் 8ம் தேதி வரை கேரளாவில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..