அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கும்..!!
மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாட்டு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர், ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என அறிவித்துள்ளது.
இன்று முதல் இன்னும் மூன்று நாட்களுக்கு தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நாளை இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..