அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா..?
தமிழகத்தில் இன்று முதல் 9ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் நாளையும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை,திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..