தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 11ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..