10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு..
குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை முதல் மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை
பெய்து வருகிறது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேக மூட்டத்துடனும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.