சென்னையில் தொடரும் கனமழை..! பாதிக்க போகும் முக்கிய பகுதிகள்..!
சென்னை கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சென்னை பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே இந்த ஆண்டு அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னை மாநகராட்சி சார்பாக நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று சில தகவல்களை வெளியிட்டுள்ளார்..
உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது.
சென்னையை பொறுத்த வரை ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரு நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடசென்னையில் 9 சென்டிமீட்டர் ஒருநாளில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் சுரங்க பாதையில் பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழை நீர் வெளியேறற்றி வருகிறது.
உடனுக்குடன் தேங்கும் மழை தண்ணீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான கழிவுநீர் அகற்றும் பணி குடிநீர் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பல சாலைகளில் தண்ணீர் பிரச்சனை சவால்கள் உள்ளது. இரவு நேர பணிகளும் இதற்காக நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் பொது சுகாதார பிரச்சனைகள் தண்ணீர், உணவு, பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சென்னையில் கனமழை வெள்ளம் பாதிக்க போகும் முக்கிய இடங்கள் அண்ணாசாலை, வியாசர்பாடி, வில்லிவாக்கம், பெரம்பூர், புரசைவாக்கம், மின்ட், திருவொற்றியூர், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மின்ட் தங்க சாலை, பட்டாளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பாதிப்பு அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..
-லோகேஸ்வரி.வெ