கனமழை எச்சரிக்கை 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 14ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது..
குறிப்பாக சென்னைக்கு அரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.., மற்றும் அக்டோபர் 16ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் விடப்பட்டு இருந்தது..
இந்நிலையில், கனமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனைக்கு பின் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது., மேலும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..