தடை செய்த நெகிழி பொருட்களை விற்றதால் நடந்த சோகம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பறிமுதல் செய்ததை தொடர்ந்து விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு வைத்துள்ளனர், அதன் பெயரில் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த வியாபாரிகள் மீது அபராதம் விதித்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.