திருவண்ணாமலை கிரிவலம் சென்ற தலைமை காவலர்… கூட்ட நெரிசலில் சிக்கி பலி…!
விழுப்புரம் இஎம்ஆர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் மோகன்(45). இவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி, விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவில் (ஒசிஐயு) ஏட்டாக பணிபுரிகிறார்.
இந்நிலையில், வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் மோகன் நேற்று பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.
கிரிவலப் பாதையில் வருண லிங்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிச்சலில் சிக்கி தவித்த நிலையில் திடீரென மோகனுக்கு மயக்கம் ஏற்பட்டு, கீழே விழுந்தார்.
உடனடியாக, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மோகனின் உடலை உடல்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்