இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் இந்த ஆண்டின் மிக பெரிய வெற்றிகளில் ஒன்றாக சேர்ந்துள்ளது. சுமார் 10 கோடியில் எடுக்கப்பட்ட லோயே டுடே 70 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரதீப்பின் முதல் படமான கோமாளி படத்தின் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் பிரதீப் பேட்டி ஒன்றில் கூறுகையில், கோமாளி படத்தின் கதையை பல நடிகர்களிடம் கூறினேன் யாரும் வாய்ப்பளிக்கவில்லை பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் கதை கூறினேன். அவருக்கு இந்த கதை பிடித்து போனதால் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அப்போது அவர் தேவி 2 நடித்தும் மற்றும் ஒரு ஹிந்தி படத்தை இயக்க முயற்ச்சித்தும் வந்தார் அதனால் தாமதமானதால் கோமாளி படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் கூறினேன். கதை அவருக்கு பிடித்ததால் கோமாளி படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் 15 கோடி பட்ஜெட்டில் உருவான கோமாளி திரைப்படம் 100 கோடி வரை ஓடி அதிக லாபத்தை பெற்றது இதன்மூலம் ஜெயம் ரவி கும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. மேலும் லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.