இந்தியாவிலிருந்து பல மாநிலங்களிருந்து ஐக்கிய அமீரகத்திற்கு தொழில், கல்வி மற்றும் பணி போன்ற தேவைகளுக்காக செல்கின்றனர். தற்போது இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஐக்கிய அமீரகம் புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில்,இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் பாஸ்ப்போர்ட்டில் முதல் மற்றும் இறுதி பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று புதிய தடை விதித்துள்ளது. அவ்வாறு அதில் அவர்களின் பெயர்கள் இல்லை என்றால் அந்தநாட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் பெயர்களுக்கு பின்னால் தந்தையின் பெயரோ அல்லது குடும்பத்தின் பெயரோ இடம்பெற வில்லை என்றால் அவர்களை அமீரகத்திற்குள் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. அமீரகத்தில் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பெயருக்கு பின்னால் குடும்பத்தின் பெயரை கொண்டவர்களுக்கு இது பொருந்தாது என்று அறிவித்துள்ளது. இந்த விதி கடந்த திங்களன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.