ஆம்பூரில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவர் மீது கண்டெய்னர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழப்பு…
ஆம்பூரில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவர் மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தோல் தொழிற்சாலை காவலாளி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம். இவர் சோலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடித்து விட்டு மிதிவண்டியில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகஜீவன்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனர் பிரகாஷ் என்பவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், நகரப் பகுதியில் கடந்த 8 மாத காலமாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், இருபுறமும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்து மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதால், மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.