திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக முதலமைச்சர் பேச்சு
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், புதுமைப் பெண், நான் முதல்வன் , மக்களை தேடி , மருத்துவம், ஒலிம்பிக் தங்கப்பதக்கம், உங்கள் பகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என பல திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
ஆட்சியில் இல்லாதபோதும் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்காக போராடி பயன்களை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்தார்.
அரசின் சேவைகள் எல்லாம் பொதுமக்களுக்கு எளிமையாக சேர விரும்பியதன் காரணம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இதுவரை 60 ஆயிரத்து 560 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.