தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் செயல்பாட்டு குழுமத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.