அவன் அவளை பார்க்கிறாள்.. இந்த பார்வையை கூட பாடலாக பாடியவர்..!
பார்ப்பதற்கு அழகு தேவதையாக இருக்கும் பாடகி இவர், ஆனால் இவருக்கும் இவருடைய குரலுக்கும் வித்தியாசமான பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையான பாடகி என்றே சொல்லலாம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பின்னணி பாடல்களை பாடியவர் “ரோஷினி” இவர் பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கரில் பாடி பிரபலமாவர் ஆவர்.
இவருடைய தங்கையுடன் சேர்ந்து 37 மணி நேரம் இடைவிடாமல் பாடல்கள் பாடி உலக சாதனை நிகழ்த்தினார். இது கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தது இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் இவர் பாடிய பாடல்களை பார்ப்போம்.
அட இந்த பாடலை இவர்தான் பாடினாரா இன்று வரை ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் இந்த பாடல் எங்கு கேட்டாலும் இறங்கி ஆட வைக்கும் “குத்து” திரைப்படத்தில் வரும் “போட்டு தாக்கு” இந்த பாடலை பாடலாசிரியர் வாலி எழுத, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, சிலம்பரசன் மற்றும் ரோஷினி இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
ஏய்… போட்டு தாக்கு…
வரா ஒரு புறா போட்டு தாக்கு…
ஏய்… ஹிட்டு சாங்கு ஒன்னு…
போட்டு தாக்கு…
எந்த பாடல்களை பாடுவதிலும் தனி திறமை கொண்டு இருப்பவர்தான் ரோஷினி அந்த வகையில் இந்த பாடலிலும் இவர் பங்கு இருக்கிறதா நம்பவே முடியலையே. தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் வரும் “என் ஜன்னல் வந்த காற்றே” இந்த பாடலை இன்று கூட பலபேரின் வாட்ஸ் ஆப் வைத்திருப்பார்கள்.
இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத ,இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க , ரோஷினி, பிரியா ஹேமேஷ், திவ்யா விஜய், பான் பண்டி இவர்கள் அனைவரும் சேர்ந்து பாடிய பாடல்.
என் வாசல் கோலம் பார்த்து…
ஒரு கவிதை சொல்லும் வானம்…
என் கைகள் கோர்த்து கொள்ள…
அட காற்றுக்கென்ன நாணம்…
காதலியே கை பிடித்து கூட்டி செல்லும் பொழுது அவள் அவனை பார்க்கிறாள். அவனுடய கருப்பான கையால் என்ன பிடித்து இழுத்து செல்கிறான், அதையே பாடலாக பாடி இருப்பார்கள். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுத இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ரஞ்சித் மற்றும் ரோஷினி இருவரும் இணைந்து பாடிய பாடல் இது.
வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு…
உன்னை பாா்த்தேனே…
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே…
உன் காதல் கதவை ஏன் சாத்தி வைத்திருக்கிறாய் என் கூட வந்து கொஞ்சம் பலகாலம் அப்படினு மொறப்பொண்ணை பார்த்து மாமன் பாடும் பாடல்தான் இது “ஈஸ்வரன் ” திரைப்படத்தில் வரும் பாடல் இது. இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத இசையமைப்பாளர் தமன் எஸ் இசையில், சிலம்பரசன், ரோஷினி ஜே கே வி & தமன் எஸ் இணைந்து பாடிய பாடல் .
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெக்கமுன்னு ஏமாத்தி…
எட்டி எட்டிப் போகதடி என்ன மல்லாத்தி…
உன்ன நான் நெஞ்சுகுள்ளத் தொட்டில் கட்டி வச்சேன் காப்பாத்தி… பாடகி ரோஷினி பாடிய பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது..?
-சரஸ்வதி