அசல் பட தோல்விக்கு இவர் தான் காரணம்..! இயக்குநர் சரண் பேட்டி..! ஷாக் ஆன ரசிகர்கள்..!!
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடமுயற்ச்சியில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நீண்ட நாள் ஆகியும் படத்தை பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை.. பொங்களுக்காவது எதாவது அப்டேட் வருமா என எதிர் பார்த்து கொண்டிருந்த போது தான் அஜித்தின் அடுத்த பட அப்டேட் கிடைத்தது.
அதாவது விடாமுயற்சிக்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஜீன் மாதத்தில் தொடங்க இருகிறது. இந்நிலையில் அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சரண் அளித்துள்ள பேட்டி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.
அஜித்தின் கரியரில் இயக்குநர் சரண் ரொம்பவே முக்கியமானவர். அவர் அஜித்தை வைத்து இயக்கிய காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகியது. ஆனால் அசல் படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது.
படத்தின் மேக்கிங் ரிச்சாக இருந்தாலும் திரைக்கதை சுத்தமாக செட் ஆவாததால் அந்தப் படம் தோல்வியடைந்தது. இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரித்திருந்தார். அஜித்தின் கெட் அப் படத்தில் அருமையாக இருந்தாலும் படம் சரியான ஃப்ளாப் ஆனது.
இந்நிலையில் சரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அசல் படத்தின் டைட்டில் கார்டில் அஜித் தனது பெயரை போட சொன்னதற்கு காரணமே எந்த திட்டாக இருந்தாலும் நான் வாங்கிக்கொள்கிறேன் என்று தான்.
மேலும் இந்தப் படத்தில் நான் பஞ்ச் டயலாக் பேசமாட்டேன். படத்தின் பெயருக்கு கீழே Power of Silence என்ற Tagஐ அவர்தான் போட சொன்னார். அந்தப் படத்தில் என்னை கையை கட்டி நீச்சல் அடிக்க சொல்லிவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
இப்படத்தில் அஜித்தும் வசனம், திரைக்கதை எழுதுவதில் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. முக்கியமாக எங்களது கூட்டணியில் அசலுக்கு முன்னர் வந்த படங்களை மைண்டில் வைத்து ரசிகர்கள் அந்தப் படத்தை பார்த்தார்கள்.
அது அவர்களுக்கு திருப்தியை அளிக்கவில்லை. இப்போது என்னையும், அஜித்தையும் அந்தப் படத்தில் மறந்துவிட்டு படத்தை பாருங்கள். அது ரொம்பவே நுணுக்கமான திரைப்படம் என கூறியுள்ளார்..
– பவானி கார்த்திக்