மருத்துவர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு..!! ரோகிணி கொடுத்த புகார்..?
மருத்துவர் காந்தராஜ் தமிழ் சினிமாவின் திரைப்ரபலங்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்படி காந்தராஜ் பேசியது என்னவென்று இதில் விரவாக பார்க்கலாம்
திரைபிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு அளிகப்பட்டு வருவதை தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒன்று அதிகரித்து வருவதால் கடந்த மாதம் கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது..
கேரளா சினிமாவில் மட்டுமின்றி தமிழ்., தெலுங்கு சினிமாவிலும் கூட பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ராதிகா, குஷ்பூ போன்ற சீனியர் நடிகள் தெரிவித்தனர்.. அதன் பின் தமிழ் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்கள் பற்றி பல நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் பேட்டி அளித்திருந்தனர்..
அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் பேசியது சர்ச்சையாக வெடிக்க தொடங்கியுள்ளது.. அந்த பேட்டியில் அவர் பேசியதாவது..,
“நடிப்பதற்கு முன்பே ஓகே சொல்லி நடித்து விட்டு இப்போ ஏன் புகார் கொடுகிறார்கள்..? இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் என இப்போவா இருக்கு இல்லையே எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இந்த அட்ஜஸ்மெண்ட் இருந்துட்டு தான் இருக்கு. நடிகர்களுக்கு மட்டுமல்ல, டைரக்டர், கேமராமேன்., டெக்னீஷியன்களையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் தான் நடிகைகள் இருக்கிறார்கள் என பேசியுள்ளார்..
காந்தராஜின் இந்த பேச்சுக்கு நடிகைகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக விசாக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளது.. அந்த கமிட்டியின் தலைவர் ரோகிணி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்..
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிரு ப்பதாவது “நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக டாக்டர் காந்தராஜ் பேசியிருப்பதுடன், தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பையும் கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது.
நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளும் படி அந்த புகாரில் குறிபிட்டுள்ளார்..
காந்தராஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பின்வரும் காலங்களில் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கும் நபர்களுக்கு ஒரு பயம் வரும்.. எனவும் அந்த புகாரில் நடிகை ரோகிணி குறிபிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..