ADVERTISEMENT
பாஜக அண்ணாமலை போல ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக ஒருபோதும் செய்யாது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போல ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக ஒருபோதும் செய்யாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை போல யாரையும் தாங்கள் வலை வீசி பிடிப்பது இல்லை என, பாஜக எம்.எல்,ஏக்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயகுமார், பாஜகவில் மாற்று கட்சியினரை சேர்க்க அண்ணாமலை விரித்த கடை போனி ஆகவில்லை என விமர்சித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.