ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? காயமடைந்த உக்ரைன் மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதா? என்ற வைகோவின் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்தே இருதரப்பும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், பேச்சவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் போரை உடனடியாக நிறுத்திவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் பலமுறை பேசியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உக்ரைன் பிரதமரையும் அவர் சந்தித்தாகவும் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் தொலைபேசியில் உரையாடியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காயமடைந்த உக்ரைன் மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதா? என்ற வைகோவின் கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இந்தியா, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 100 டன் பொருட்களை வழங்கி உள்ளதாக உக்ரைன் அரசின் வேண்டுகோளின்படி கல்வி நிறுவனங்களை புனரமைக்கவும் இந்தியா நிதி உதவி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்