பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர்,
பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்