சிறையில் ஏற்பட்ட பழக்கம்.. இறுதியில் நேர்ந்த சோகம்..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வசித்து வந்தவர் லக்ஷ்மணன் (26). இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, மீஞ்சூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், லக்ஷ்மணனும் புழல் சிறையில் இருந்த போது நண்பர்களாகியுள்ளனர்.
இந்தநிலையில், விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவிக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.
இந்த விஷயம் குறித்து லட்சுமணனுக்கு தெரியவரவே, தமது நண்பனான விஷ்ணுவை கண்டித்துள்ளார்.
பின்னர் பொன்னேரியில் விஷ்ணுவுடன் மது அருந்திய லக்ஷ்மணன், விஷ்ணுவுடன் அவரது ஊரான மீஞ்சூர்க்கு சென்று விஷ்ணுவின் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மீண்டும் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பெரிய தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விஷ்னு தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து லக்ஷ்மணனை வெட்டிக் கொலை செய்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சுர் போலீசார் லக்ஷ்மணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகிய கொலையாளிகள் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
லட்சுமணனின் மனைவி ரம்யாவிடம் போலீசார் கள்ளத்தொடர்பு குறித்தும், கொலை சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழலை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்