குட்கா வழக்கு விவகாரம்..! விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஜார்ஜுக்கு பறந்த சம்மன்..!
குட்கா முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்ய தடை விடுதிக்கப்பட்ட பின்னும்.., அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் டெல்லி சிபிஐ காவல்துறை அதிகாரிகள் வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். அதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ, அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு :
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் மீது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது., அதன்பின் பிழையை சரி செய்து மீண்டும் விசாரணைக்கு அனுமதிப்பதற்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்து விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றதிற்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது..
பின்னர் பிழைகளை திருத்தம் செய்ய ஆறு பேருடன் புதிதாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து தாக்கல் செய்யபட்டிருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி,விஜய் பாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) டி.கே.ராஜேந்திரன் உட்பட 21 பேர் மீது கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது..
அந்த வழக்கில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குற்ற வழக்கில் ஈடுபட்டு இருப்பதால்., சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சிபிஐ நீதிமன்றம் மாற்ற உத்தரவிட்டிருந்தது. அன்று எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய காவல்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த வழக்கில் புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதில் சேர்க்கபட்டு இருப்பதால் அனைவருக்கும் சம்மன் அனுப்பி இருப்பதால் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார். வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும் படி சிபிஐ அதிகாரிகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..