அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை ஆர்ப்பாட்டம்..! CLRI இயக்குனருக்கு கண்டனம்..!
அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் முதன்மைச் செயலாளர் பாவனன் பேசுகையில்.
அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் இணைப்பு சங்கமான CLRI SC/St ஊழியர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஐயப்பன் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் CLRI ஐ நிர்வாகமானது அவரை குறிவைத்து தாக்கி பொய்யான குற்றச் சாட்டினை வழங்கி காலம் தாழ்த்தி வந்த நிலையில் பேரவையின் சார்பில் டாக்டர் ஐயப்பன் அவர்களின் வாழ்வாதார பிரச்சினையை கருத்தில் கொண்டு பேரவையின் சார்பில் நாம் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் CLRI இயக்குநர் டாக்டர் ஸ்ரீராம். அவருடைய நிலையை மாற்றிக் கொள்ளாமல் டாக்டர் ஐயப்பன் அவர்களுக்கு எந்த வித பணி ஓய்வு பணிக்கொடை யும் வழங்காமல் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சாதிய வன்மத்தோடு செயல்பட்டு வருகின்றார். பேரவையின் சார்பில் CLRI ன் இயக்குநரை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த 29.4.24 அன்று டாக்டர் K.ஐயப்பன் அவர்களின் துணைவியார் டாக்டர் L.சுகுணா அவர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கும் இது நாள் வரையில் எந்த வித பணி ஓய்வு பணிக்கொடையும் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார் இப்படி ஒரு குடும்பத்தையே நாசம் செய்ய நினைக்கும் CLRI ன் இயக்குநரின் மேல் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரவை பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எனவே தேசிய தலைவர் டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்களின் வழி காட்டலின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் அலுவலகமான சாஸ்திபவனில சுமார் 100 பேர் சென்று இயக்குநரை சந்தித்து டாக்டர். ஐயப்பன் அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க மறுத்த CLRI ன் இயக்குநர் மீது உடனடியாக சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரவையின் சார்பில் இயக்குநரை சந்தித்து பேச உள்ளோம் என அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில முதன்மைச் செயலாளர் பாவனன் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..