5 வயது குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..!! ஓட்டுனரை பாராட்டும் அரியலூர் மக்கள்..!!
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே நாய் துரத்தியதில் சாலை குறுக்கே ஓடிய குழந்தை, காப்பாற்ற முயற்சித்து அரசு பேருந்தை சுவற்றில் மோதிய ஓட்டுனர். அதிர்ஷ்டவசமாக சிறுமி மற்றும் பயணிகள் உயிர் தப்பிப்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு, மீன் சுருட்டி சென்ற அரசு பேருந்து, குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக ஒரு ஐந்து வயது பெண் குழந்தை நாய் துரத்தியதால், சாலையின் குறுக்கே ஓடியுள்ளார். அப்பொழுது குருவாலப்பர் கோவிலை நோக்கி வந்த பேருந்து.., சிறுமியை கண்ட ஓட்டுனர் தங்கதுரை, குழந்தையை காப்பாற்ற எண்ணி அரசு பேருந்தை சாலையின் ஓரமாக திருப்பியுள்ளார்.
அப்பொழுது சாலை ஓரமாக இருந்த தடுப்புச் சுவற்றில் அரசு பேருந்து மோதியுள்ளது . இதனால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஓட்டுநர், சீட்டில் இருந்து பேருந்தின் உள்ளேயே கீழே விழுந்துள்ளார். பேருந்தில் பயணித்த பயணிகள் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லை.., அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
ஆனால் பேருந்து, அருகில் இருந்த மாடி வீட்டின் சுவற்றில் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் திறமையாக செயல்பட்டதால் அதிஷ்டவசமாக சாலையில் குறுக்கே வந்த சிறுமியும் பயணிகள் உட்பட அனைவரும் உயிர்த்தப்பினர்.
சிறுமியையும், பயணிகளையும் காப்பாற்றிய டிரைவரின் திறமையை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post