அரசு உதவிபெறும் பாலிடெக்னீக் கல்லூரி கேன்டீனுக்கு சீல்..! பரபரப்பான சென்னை வேப்பேரி..!
சென்னை பிரபல அரசு உதவிபெறும் பாலிடெக்னீக் கல்லூரியான பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 108 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கல்லூரியில் தற்போது பெரும் பரபரப்பு காணப்பபட்டது.
சென்னை வேப்பேரியில் பிரபல அரசு உதவிபெறும் பாலிடெக்னீக் கல்லூரியான பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி, பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் அரசு ஆரம்பப்பள்ளி, பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் பொறியியல் கல்லூரி, பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் ஐ.டி.ஐ மற்றும் பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் அறக்கட்டளை என மிகவும் பிரசித்தி பெற்றது..
ஆண்டு தோறும் பல்லாயிரம் கணக்கான மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து, வேலை வாய்ப்புடன் வெளியிற்றும் இக்கல்லூரியில் தற்போது ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது..
அதவாது பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னீக் கல்லூரியின் கேன்டீனில் சுகாதாரமற்ற முறையில், உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது..
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள்.. சோதனை மேற்கொண்டதில் உணவுகள் பாதுக்காகாக்கப்படாதது மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டது.. உறுதியானது.. பின் அதனை அடுத்து கல்லூரி கேன்டினை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும் அதில் உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..