தங்களை தாமே கடவுளுக்கு மேலாக பாஜக அரசு நினைத்துக் கொள்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று இந்திய கூட்டணியின் 2வது ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் காங். தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது பேசியதாவது,
இது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, 140 கோடி மக்களின் கூட்டணி. சுதந்திர இந்திய வரலாற்றிலேயே மோடி அரசுதான் ஊழல் மற்றும் திமிரான அரசு. இவர்கள் தங்களை கடவுளுக்கு மேல் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும் சக்திகள் இந்தியா கூட்டணியை உடைக்க முயல்வார்கள். இன்று இங்கு யாரும் பதவி வாங்க வரவில்லை ஆனால் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
Discussion about this post