“அண்ணாமலை வேதாளம் எங்களை விட்டுட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கு” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகேன் உசேன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.,
மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர். வெள்ளையனுக்கு அடிப்படையாமல் வாழ்ந்தவர் “வீரர் அழகு முத்து கோன்” அவர்கள் தான்.
அழகு முத்து கோன் அவர்களை சிறை பிடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி, தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிகொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையை போனாலும் சரி காட்டிக் கொடுக்கக்காமல் அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் என சொன்னவர். அவர் அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தார். “வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தவர்” என முத்துகோன் அவர்கள் புகழை பற்றி பேசினார்.
விசுவாசம் இல்லா ஓபிஎஸ் :
கட்சியில் ஒன்று சேர்வது உண்மைத் தன்மை இல்லை என கூறினார். ஓபிஎஸ் அவர்களை கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத, அந்த அளவிற்கு துரோகத்தை செய்துள்ளார்.
ஓபிஎஸ் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது. TTV இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைத்தோம் என தெரிவித்தார்.
சசிகலா இல்லாத கட்சி :
எந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாதவர் ஓபிஎஸ், சசிகலா குறித்த கேள்விகளுக்கு, கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சி இணைக்க முடியும் அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம் என பதில் அளித்தார்.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்தது தான் 90 சதவீதம் இணைப்பு என்று ஓபிஎஸ் சொன்னார். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை :
தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடந்துள்ளது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ அதிகாரிகளிடம் இதை மாற்ற வேண்டும்.
வேதாளம் அண்ணாமலை :
அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல.
இன்று சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்கள் லுங்கி அணிகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள் எனவே அது அவ மரியாதைக்குறிய செயலா..? நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து கொண்டு தான் பேட்டி அளிப்பேன்.. அதை அண்ணாமலை அவதூறாக சொன்னால் எதுவும் செய்யமுடியாது..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..