சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனால் நாளை அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க காத்திருந்தவர்கள் “இன்னைக்கே இந்த விலைன்னா நாளைக்கு தங்கம் வாங்க முடியுமா?” என பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5,665 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 45,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,112 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 48,896 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.