உச்சம் தொட்ட தங்கவிலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
சில தினங்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது. விலை குறைந்ததும் நகை பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ந்தனர். பல நகைக்கடைகளில் விற்பனையும் அதிகமானது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவாக விற்கப்பட்டது, ஆனால் இன்று ஒரே அடியாக விலை உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,800 ரூபாயாக விற்கப்படுகிறது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,600 ரூபாயாக விற்கப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 36,696 ரூபாயாகவும், கிராமுக்கு 28ரூபாய் உயர்ந்து 4587 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் உயர்ந்து 79.70 காசாகவும், கிலோ 79,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடிர் தங்க விலை மாற்றம் குறித்து தகவல் எதுவும் தெரியபடவில்லை, இந்த விலைமாற்றம் குறையுமா.., என்று சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
Discussion about this post