காளியம்மன் கோவிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் ..! இது தான் காரணம் ..?
கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வீராணம்பட்டியை சுற்றி எட்டு கிராமங்கள் உள்ளது. அந்த எட்டு கிராமத்திற்கும் பொதுவாக ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு மிக்க இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா தொடங்கியுள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞ்சர் ஒருவர் சாமிதரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர்.
எனவே அந்த பகுதியை சேர்ந்த அனைத்து பட்டியலின மக்களும் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதி ஒரே கலவர பகுதியாக மாற ஆரம்பித்தது. இது குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள் இருதரப்பு மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்த தொடங்கினர். அந்த பேச்சு வார்த்தையில் சில சமூக இனமக்கள், இது நாங்கள் வரிவசூல் செய்து கட்டிய கோவில், இந்த பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக இருந்துள்ளனர்.
பலமுறை கேட்டும் சிலர் ஒப்புக்கொள்ளாததால், வருவாய் துறை அதிகாரிகள் கோவிலை இழுத்து கதவை பூட்டி சீல் வைத்தனர். இதில் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சில மக்கள், ஆர்டிஓ காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வேறு எந்த கலவரமும் ஏற்படாமல் இருக்க நூற்றுகண்காகன காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post